கொக்குவில் இந்துக் கல்லூரியால் வருடாந்தம் லயன்.டு.பாலகிருஷ்ணன் நினைவாக நடாத்தப்படும் அணிக்கு 6 பேர் கொண்ட 5 ஓவர் கிறிக்கெட் இறுதிப் போட்டியில் கொக்குவில் இந்துக் கல்லூரியை 24 ஓட்டங்களால் வெனறு ஸ்கந்தா அணி கிண்ணத்தை கைப்பற்றியது.
இவ் இறுதிப் போட்டியானது கடந்த 28.04.2012 சனிக்கிழமை பிற்பகல் 4.30 மணியளவில் கொக்குவில் இந்துக் கல்லூரி மைதானத்தில் இடம்பெற்றது. இதில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற ஸ்கந்தவரோதயாக் கல்லூரி அணித்தலைவர் சஞ்சயன் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்து களமிறங்கிய ஸ்கந்தவரோதயாக் கல்லூரி அணியினர் அதிரடியாகத் துடுப்பெடுத்தாடி 5 ஓவர்கள் நிறைவில் 4 விக்கட்டுக்களை அழந்து 61 ஓட்டங்களை குவித்தது.
இதில் ஸ்கந்தவரோதயாக் கல்லூரிசார்பாக து.ஜனக்சன் 3 சிக்ஸர்கள் 1 பவுண்டரி உட்பட 31 ஓட்டங்களையும் வு.நிரேசன் 3 சிக்ஸர்கள் 1 பவுண்டரி உட்பட 22 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர். பந்துவீச்சில் கொக்குவில் இந்துக் கல்லூரி சார்பாக திவாகர், பங்குஜன் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கட்டுக்களை கைப்பற்றினர்.























